#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு தயாராகிவிட்ட சாய்னா நேவால்; யார் அந்த அதிர்ஷ்டசாலி!!!!
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையாக திகழ்பவர் சாய்னா நேவால். இரண்டு தடவை ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் காமன்வெல்த், ஆசிய போட்டிகளிலும் பங்கேற்று பல முறை இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.
இந்நிலையில் ஹைதராபாத்தை சார்ந்த அவருடைய திருமணம் டிசம்பர் 16 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. சக வீரரான பாருப்பள்ளி காஷ்யப்பை மணக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் எளிமையான முறையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முக்கியமான 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது டிசம்பர் 21 அன்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காஷ்யப்பும் இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.