பாகிஸ்தான் 315 ரன்கள் குவிப்பு! பங்களாதேசை எத்தனை ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும் தெரியுமா?



pakistan have to restrict bangladesh in 7 runs

அதை இறுதி போட்டியில் உலகின் நான்காவது அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியானது இன்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்துள்ளது.

அரையிறுதியில் நான்காவதாக நுழைவதற்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்புகள் இருந்தன. இதற்கு பாகிஸ்தான் அணி பங்களாதேசை அதிகமான ரன் ரேட்டில் வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. நியூசிலாந்து +0.175 என்று ரன்ரேட்டில் வலுவாக காணப்படுகிறது. இன்றைய ஆட்டம் துவங்குவதற்கு முன்பு பாகிஸ்தானின் ரன்ரேட் -0.792 என்று மிகவும் பின்தங்கி இருந்தது. 

wc2019

இந்நிலையில் இன்று டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 100 ரன்களும் பாபர் அசாம் 96 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இந்த இலக்கு அதிகம்தான் என்றாலும் பாகிஸ்தானின் இன்றைய நிலைமைக்கு இது மிகவும் குறைவு.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் எனில் பங்களாதேசை வெறும் 7 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இல்லையெனில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இப்போதைய சூழலில் இதற்கு நிச்சயம் சாத்தியக்கூறுகள் கிடையாது. எனவே நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.