கோலியின் சாதனைகள் ஓகே தான்; ஆனால் இதை செய்ய முடியுமா? சவால் விடும் சோயிப் அக்தர்.



pakistan powler sohaip akther

தொடர் சாதனைகள் புரிந்து வரும் விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சர்வதேச அரங்கில் விராட்கோலியால் 120 சதங்கள் அடிக்க முடியுமா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று T-20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட்  தொடர்களில் வென்றுள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது.

tamilspark

முதல் போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி, 2 வது போட்டி சமனில் முடிந்தது.   மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடரானது 1-1 என்ற நிலையில் சமனில் உள்ளது.

இந்த தொடர்களில் 205 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்களை கடந்து சாதனை புரிந்த விராட் கோலி மேலும் ஒரு நாள் போட்டியில் 38 சதங்களை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.

tamilspark

இந்நிலையில் தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வரும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மற்றொரு சாதனையை இலக்காக எட்ட முடியுமா என முன்னாள் பாகிஸ்தான் அணியின் அசுர வேகபந்துவீச்சாளர் சோயிப் அக்தர் சவால் விடுத்துள்ளார். 



 

இதுகுறித்து அக்தர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,‘கவுஹாத்தி, விசாகப்பட்டினம், புனே.... தொடர்ச்சியாக 3 ஒருநாள் சதம் விராட் கோலி வேற லெவல். அவர் ஒரு மிகச்சிறந்த ரன் மெஷின். 120 சர்வதேச சதங்கள் அவருக்கு இலக்காக நிர்ணயிக்கிறேன் இதை அவரால் எட்ட முடியுமா?’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.