#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணி முதலில் பேட்டிங்! ஆடும் அந்த 11 வீரர்கள் யார்?
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 22வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டி இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை தொடரில் நான்காவது போட்டியாகும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இது 5வது போட்டி.
இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டும் 5 புள்ளிகளை கொண்டுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றும் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 3 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி.
இந்தியா அணியில் தவானுக்கு பதிலாக விஜய்சங்கர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆடும் 11 இந்திய வீரர்கள்:
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, விஜய் சங்கர், தோணி, கேதார் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாகல், குலதீப் யாதவ், பும்ரா
ஆடும் 11 பாக்கிஸ்தான் வீரர்கள்:
இமாம் உல் ஹக், பக்கர் சமான், பாபர் அசாம், ஹபீஸ், சர்பராஸ், சோயிப் மாலிக், இமாட் வசிம், சடாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், மொஹம்மது அமீர்