#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அம்மாடியோ..! 6 பந்தில் 6 சிக்ஸர்.. அடித்து பறக்கவிட்ட பொல்லார்ட்.. வைரல் வீடியோ..
வெஸ்டின்ட்டிஸ் வீரர் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது சமீபத்தில் நடைபெற்றது.
முதல் T20 போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 140 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய வெஸ்டின்ட்டிஸ் அணி வீரர்கள் தொடக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
குறிப்பாக நான்காவது ஓவரினை வீசிய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா வெஸ்டின்டீஸ் வீரர்கள் லீவிஸ், கெய்ல் மற்றும் பூரன் ஆகிய மூவரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் இலங்கை அணி சற்று நிம்மதியாக இந்தநிலையில் அடுத்த ஓவரில்லையே பெரிய ஆப்பை வைத்தார் பொல்லார்ட்.
ஆம், மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றிய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா தனது அடுத்த ஓவரை வீசியபோது, 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார் பொல்லார்ட். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவரிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.