#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலக செஸ் சாம்பியனை வென்ற வீரத்தமிழன்.! இளைஞனுக்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்.!
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுகள் உள்ளன. இந்த நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் இணைய சதுரங்கப் போட்டியில் உலக சதுரங்க சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பரபரப்பான வெற்றி பெற்ற #சென்னையைச் சேர்ந்த இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 22, 2022
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில், சதுரங்க போட்டியில் தனது அபார திறமையால் உலகின் முதன்மை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வென்று நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு எனது பாராட்டுக்கள். மென்மேலும் பல உலக சாதனைகளை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.