#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்ரித்வி ஷாவின் புதிய சாதனை; ஐசிசி அறிவிப்பு.!!
மிகவும் இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார், இந்திய அணியின் இளம் வீரர் ப்ரிதிவ் ஷா.
தற்பொழுது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.
இதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய 18 வயதான ப்ரீத்திவ் ஷா முதல் இன்னிங்சில் 134 ரன்களை குறித்து இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இதன் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 70 ,33 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தார்.
இதனால் இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் மிகவும் இளம் வயதில் தொடர் நாயகன் விருதை பெற்ற வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வக்கார் யூனிஸ் 1990.
எனாமுல் ஹக் 2005
முகமது ஆமீர் 2010
மெஹ்தி ஹசன் 2014
பிரித்திவ் ஷா 2018
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியதாவது:
பிரித்வி ஷாவின் பேட்டிங் மூன்று ஜாம்பவான்களான சச்சின், லாரா,சேவாக் ஆகியோரின் கலவையாக அமைந்துள்ளது. கிரிக்கெட் ஆடுவதற்காக பிரித்வி பிறந்துள்ளார். 8 வயதில் இருந்து மும்பை மைதானங்களில் அவர் விளையாடி வருகிறார். அவரது கடின பயிற்சி, உழைப்பு இச்சிறப்பை தந்துள்ளது. பிரித்விக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.
பந்துவீச்சில் உமேஷ் யாதவின் பங்கு அளப்பரியது. கபில்தேவ், ஸ்ரீநாத் ஆகியோருக்கு அடுத்து ஓரே டெஸ்டில் 10 விக்கெட்டை வீழ்த்திய வீரராக உள்ளார். ரிஷப் பந்த், ராகுல் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செயல்படுத்தினர் என்றார் சாஸ்திரி.