#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராஜஸ்தான் அணிக்கு மேலும் ஒரு சிக்கல்! வெளியேறினார் அதிரடி வீரர்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 36 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இன்று மாலை மும்பை, ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதுவரை 3 மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள ராஜஸ்தான் அணி இனி வரும் அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம். அதேபோல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லாத சூழ்நிலை உள்ளது.
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்த ஜோஸ் பட்லர் விளையாடவில்லை. நேற்றைய போட்டியில் பட்லர் விளையாடாததற்கு அவர் தன் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது..
இந்நிலையில் இங்கிலாந்து திரும்பிய பட்லர், தன் குழந்தையை எதிர்பார்த்து உள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் ஏப்ரல் 26ம் தேதிக்கு முன்னதாக இங்கிலாந்து திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்லர் முன்னதாகவெ ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி சென்றுள்ளதால் ராஜஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.