#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறும் இந்திய கிரிக்கெட் வீரர்.
ஆண்டுதோறும் மத்திய அரசு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்து சிறப்பித்து
வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்க பல்வேறு விளையாட்டு சங்கங்களில் இருந்து மத்திய அரசுக்கு விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட்டது.
இந்தப் பட்டியலை மத்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் குழு அந்த வீரர் வீராங்கனைகளின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
மேலும் 8 பேருக்கு துரோணாச்சாரியார், 20 பேருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது