பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நாளை முக்கியமான போட்டியை வைத்துக்கொண்டு இப்படியா செய்வது! அதிர்ச்சியளித்த புகைப்படம்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகப்பெரும் விருந்தாக அமைந்திருந்தது உலக்கோப்பை கிரிக்கெட் தொடர். தற்போது இந்த தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன. இந்திய அணி நிச்சயம் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கனவோடு இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்திய அணி வீரர்களும் இந்த போட்டியில் வென்றே தீர வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ரிசப் பண்ட் ஒரு படி மேலே சென்று அதிதீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார் போல. உடல் முழுவதையும் பின்னால் வளைத்து அவர் பந்தினை பிடிப்பதை புகைப்படம் எடுத்து பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற ரசிகர்கள், ஏற்கனவே இரண்டு வீரர்கள் காயம் காரணமாக வீட்டிற்கு சென்றுவிட்டனர். நாளை முக்கியமான போட்டி இருக்கும்போது இதைப் போன்ற விபரீத பயிற்சியெல்லாம் தேவையான என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Guess who?#TeamIndia #CWC19 pic.twitter.com/Zzxp62us5v
— BCCI (@BCCI) July 8, 2019