#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடைசி ஆட்டத்தின் கடைசி ஓவரில் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ரியான் பராக்! குவியும் பாராட்டுக்கள்
ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ராஜஸ்தான் அணியின் 17 வயது ரியான் பராக் படைத்துள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்கு இதுதான் கடைசி போட்டியாகும். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மிக மோசமாக தோற்றாலும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரியான் பராக் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரியான் பராக் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் கடைசி ஓவர் வரை விளையாடிய ரியான் கடைசி ஓவரில் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரியான்.
ரியான் பராக்கிற்கு தற்போது வயது 17 ஆண்டுகள் 175 நாட்கள் மட்டுமே. இதற்கு முன்பு குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாமசன் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு 18 வயது 169 நாட்கள் ஆகியிருந்த போது அரைசதம் அடித்தார்.
#FunFact
— Rajasthan Royals (@rajasthanroyals) May 4, 2019
Youngest players to score a Vivo @IPL 5⃣0⃣
Riyan Parag - 1⃣7⃣y 175d 😎
Sanju Samson 18y 169d
Prithvi Shaw 18y 169d
Rishabh Pant 18y 237d
All 4 of them are playing today. #DCvRR #RR #HallaBol pic.twitter.com/qOcZZ2VrMg