#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெற்றிபெற்றாலும் நூலிழையில் வாய்ப்பை தவறவிட்ட ராஜஸ்தான் வீரர்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 43 போட்டிகள் முடிபெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. நேற்று நடந்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. 176 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிதானமாக விளையாடி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது.
ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 47 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். இந்த IPL சீசனில் விளையாடிவரும் இளம் வீரர்களில் இவரும் ஒருவர். 17 வயதே ஆகும் ரியான் கடந்த இரண்டு போட்டிகளில் நூலிழையில் சில சாதனைகளை தவறவிட்டுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் 47 ரன் அடித்த ரியான் ரஸ்ஸல் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். இன்னும் 3 ரன் எடுத்திருந்தால் குறைந்த வயதில் 50 ரன் எடுத்த ஐபில் வீரர் என்ற பெருமையை ரியான் படைத்திருப்பார். ஆனால் 3 ரன்னில் அந்த சாதனையை தவறவிட்டுள்ளார் ரியான்.