பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"கிரிக்கெட்டை கற்றுக்கொடுக்க அவர் ஒரு சிறந்த பொக்கிஷம்" - ரோகித் சர்மாவிற்கு சமி புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகச்சிறந்த பொக்கிஷம் என முகமது சமி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு "தி ஹிட்மான்" என்ற புனைப்பெயரும் உள்ளது. இதற்கு காரணம் அவர் அசால்டாக அடிக்கும் சிக்சர்கள் தான்.
களத்தில் நீண்ட நேரம் நின்று ஆடும் திறமை கொண்ட ரோகித் சர்மா ஒரு ஆள் மட்டும் தான் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்றுமுறை இரட்டை சதம் விளாசியுள்ளார். இந்தியா வீரர்களில் அதிகபட்சமாக 400 சிக்சர்களை விளாசியுள்ள அவர் இதுவரை 29 சதங்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் இர்பான் பதானுடன் இன்ஸ்டாகிராமில் நேர்காணலில் பங்கேற்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார். முதலில் பேசிய பதான், "ரோகித் சர்மா கிரிக்கெட்டினை ஒரு புலவர் போல கையாளக்கூடியவர். அவர் அதிரடியாக ஆடுவது போன்றே தெரியாது; ஆனால் எதிரணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்துவிடுவார்" என கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சமி, "ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த பொக்கிஷம். கிரிக்கெட் என்றால் என்ன என்று காட்டவும் கிரிக்கெட்டை கற்றுக்கொடுக்கவும் அவர் மிகச்சிறந்த உதாரணம். அவர் ஒரு சுத்தமான பேட்ஸ்மேன். அவர் பேட்டிங் செய்யும் போது பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்" என புகழாரம் சூட்டியுள்ளார்.