பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உலகக்கோப்பையில் 5 சதமடித்தும் ரோகித் சர்மாவிற்கு கிடைக்காத பெருமை - லட்சுமணன் கண்டனம்!
கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன் அல்மனாக் என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் 2019ன் சிறந்த வீரர்களின் பட்டியலில் ரேகித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.
விஸ்டன் அல்மனாக் என்ற புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் வெளியிடப்படும். இந்த புத்தகத்தில் கடந்த ஆண்டின் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெறும்.
ஏப்ரல் 9, 2020ல் வெளியான இந்த புத்தகத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் ஜோப்ரா ஆர்ச்சர், பாட் கம்மின்ஸ், மார்னஸ் லாப்பஸ்கேன், சைமன் ஹார்மர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் எல்லிஸ் பெர்ரி ஆகிய 5 பேர்கள் இடம்பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டின் தலைசிறந்த வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் 2019 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி 5 சதங்கள், 648 ரன்கள், சராசரி 81.0 என சிறந்து விளங்கிய ரோகித் சர்மாவின் பெயர் விஸ்டன் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் அதிர்ச்சியாய் உள்ளது என விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஷஸ் தொடரை மட்டும் கருத்தில் கொண்டு ஒருசிலர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆஷஸ் தொடரை விட பெரியது உலகக்கோப்பை தொடர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.