பயிற்சியாளராக களமிறங்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்! ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா!



Sachin cricket coach for austrrlia fire accident

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் பயிற்சியாளராக களமிறங்க உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி உதவி செய்து வருகின்ற்றனர். இந்தநிலையில் கட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட நடத்தப்படும் புஷ்பயர் கிரிக்கெட் பாஷஸ் போட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் பயிற்சியாளராக களமிறங்க உள்ளனர்.

sachin

புஷ்பயர் கிரிக்கெட் பாஸ் போட்டியில் மோதும் பாண்டிங் லெவன் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், வார்ன் லெவன் அணிக்கு கோர்ட்னி வால்ஷும் பயிற்சியாளராக இருப்பார்கள். அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி டி-20 நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் நிதி திரட்டும் முயற்சிகளின் ஒரு பகுதி என கூறுகின்றனர்.

சச்சின் மற்றும் கோர்ட்னியை ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வரவேற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இங்கு அவர்கள் இருவரும் வீரர்களாக நிறைய வெற்றி மற்றும் சாதனைகளை பெற்றனர், சிறந்த விஷயத்திற்காக அவர்கள் இதில் பங்கேற்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.