சச்சின் தன்னை திட்டியதை பற்றி பகிர்ந்துகொண்ட மெக்ராத்!!



sachin sledged mcrath

ஒருகாலத்தில் இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி என்றாலே, சச்சின் மெக்ராத் பந்தை எதிர்கொள்ளும் விதம் சுவாரஸ்யமாக இருக்கும். இதனை பார்ப்பதற்கென்றே ரசிகர் பட்டாளமே இருக்கும். அந்த அளவிற்கு ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும். 

அப்படி சுவாரஸ்யமான ஒரு போட்டியில் நடந்த நிகழ்வை பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு கென்யாவில் ICC நாக்அவுட் டிராபியின் கால் இறுதிப் போட்டி நடந்தது.  இந்த போட்டியில் இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த நாள் சச்சினுக்கு சாதகமான நாளாக அமைந்தது. மெக்ராத் ஓவரில் சச்சின் 3 சிக்சர்களை விளாசினார்.

Sachin tendulkar

சச்சின் டெண்டுல்கர் என்றாலே, மனதில் தோன்றும் விஷயம் எளிமையானவர் மற்றும் விளையாட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவர் என்பது தான். டெண்டுல்கர் எதிரணியுடன் சண்டையிடும் குணத்தை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க இயலாது. காரணம், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை, அவர் பேட் பேசுவதை தான் அனைவரும் பார்திருப்பர். எனினும், அவர் சில சந்தர்ப்பங்களில் எதிரணியுடன் சண்டையிட்டு இருக்கிறார். அப்படி ஒரு அறிய நிகழ்வை தான் மெக்ராத் கூறியுள்ளார்.

Sachin tendulkar

வழக்கமாக மிகவும் மெளனமான நபர் டெண்டுல்கர், அன்று மெக்ராத் பந்துவீசுகையில் டெண்டுல்கர் இறங்கி வந்து சிக்ஸர் அடித்தார். அது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஏனென்றால் அந்த சிக்சரை அவர் அடிக்கும் போது திட்டிக்கொண்டே அடித்துள்ளார்.   

இந்த நிகழ்வை நினைவுகூர்ந்த மெக்ராத், மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் சச்சின் என்னை ஸ்லெட்ஜ் செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் அவர் அது வழக்கத்திற்கு மாறாக இருந்தது என்றும் சச்சின் அதற்கு முன்பு  அப்படி நடந்து கொண்டதில்லை. இது சச்சின் நாள், நம்பிக்கையோடு அவர் அதை எனக்கு தெரியப்படுத்தினார், என மெக்ராத் தெரிவித்தார்.