ஐபிஎல்லில் பும்ராவை மிஞ்சிய சந்தீப் சர்மா.. வியக்கவைக்கும் புள்ளிவிவரம்!



sandeep-sharm-is-ahead-of-bumrah-in-ipl

சர்வதேச அளவிலும் ஐபிஎல் தொடரிலும் முதன்மை பந்துவீச்சாளராக இருந்து வருபவர் இந்திய அணியின் பும்ராஹ். ஆனால் ஒட்டுமொத்த ஐபிஎல் புள்ளிவிவரத்தின் படி பும்ராவை விட சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா முன்னிலையில் உள்ளார்.

உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக பந்துவீசும் சந்தீப் ஷர்மாவிற்கு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. காரணம் ஐபிஎல் தொடரில் சந்தீப் சர்மா இரண்டாவது தேர்வாக தான் கருதப்படுவார்.

sandeep sharma

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்குமார் காயம் காரணமாக விலகியதால் சந்தீப் ஷர்மாவிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை நன்றாக பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

மேலும் ஐபிஎல் புள்ளிவிவரப்படி பும்ரா மற்றும் சந்தீப் சர்மா இருவருமே தலா 90 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் பும்ரா 105 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில் சந்தீப் சர்மா 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் பந்துவீச்சு சராசரியிலும் பும்ராவை விட முன்னணியில் இருக்கிறார். பும்ராவின் சராசரி 24.22. சந்தீப் சர்மாவின் சராசரி 24.02. ஸ்ட்ரைக் ரேட்டிலும் முன்னணியில் இருக்கிறார். பும்ராவின் ஸ்ட்ரைக் ரேட் 19.4. சந்தீப் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 18.6.