பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நட்டு.. உங்கள நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தமிழக வீரர் நடராஜனை தூக்கிவைத்து கொண்டாடும் பிரபல இந்திய வீரர்..
நடராஜனை நினைத்து தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் வலைப்பந்து வீச்சாளராக வந்தவர் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் நடராஜன். தனது தனிப்பட்ட திறமையால் முதலில் ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெற்ற நடராஜன் அதனை அடுத்து T20 போட்டியிலும் வாய்ப்பினை பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைத்து, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிவருகிறார். மேலும், ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி, தனது முதல் சர்வதேச போட்டிகளை பதிவு செய்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் நடராஜன் தட்டிச்சென்றார்.
இந்நிலையில் நடராஜனின் ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், "நடராஜனின் வாழ்க்கை கனவுகளால் அடங்கியது. அவரை நினைக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.