#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு புகைப்படத்தால் தோனி மற்றும் கோலியின் மனைவிகள் பற்றி வெளியான ரகசியம்!
கிரிக்கெட் உலகின் இன்றைய தலைசிறந்த வீரர்களாக இருப்பவர்கள் இந்திய அணியின் முன்னாள் மற்றும் இன்றைய கேப்டன்கள் தோனி மற்றும் கோலி. இருவரும் இந்திய அணியில் தல, தளபதி என்ற அளவில் இருப்பவர்கள்.
இவர்களுக்குள் ஒரே அணியில் விளையாடுவது மட்டும் தான் ஒற்றுமை என நாம் அனைவரும் இத்தனை காலம் எண்ணியிருப்போம். ஆனால் இவர்களுக்குள் வேறு ஒரு ஒற்றுமையும் இருக்கிறது என்ற ரகசியம் இப்போது தான் வெளியாகி இருக்கிறது.
இவர்கள் இருவரின் மனைவிகள் சாக்சி மற்றும் அனுஷ்கா சர்மாவைப பற்றி தெரியாத கிரிக்கெட் ரசிகர்களே இருக்கமாட்டார்கள். இந்தியா விளையாடும் ஆட்டங்களில் மைதானத்தில் இருக்கும் இவர்களை காட்டாமல் கேமரா மேன்களும் இருந்ததில்லை.
இப்போது இவர்களைப பற்றி வெளியாகி இருக்கும் ரகசியம் என்னவெனில், இவர்கள் இருவரும் சிறு வயதில் ஒரே பள்ளியில் படித்தவர்களாம். இவர்கள் அசாம் மாநிலத்தில் மார்கரீட்டா பகுதியில் உள்ள St.Mary's பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். இதனை 2013 ஆம் ஆண்டே இருவரும் சந்திக்கும் போது கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு சான்றாக பள்ளியில் நடந்த விழாவின் போது எடுத்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்தினை அனுஷ்கா சர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் தேவதை போல் வேடமணிந்து இருப்பவர் தான் சாக்சி என்றும், அருகில் பிங்க் நிற ஆடையணிந்து இருப்பவர் தான் அனுஷ்கா சர்மாவாம்.