#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"உலக கோப்பையில் இப்படி செய்தால் என்ன!" - இந்திய அணிக்கு பிரபல கிரிக்கெட் வீரர் யோசனை
2019 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய அணி தனது வீரர்களை தேர்வு செய்வதில் பல்வேறு வகையான யோசனைகள் பலதரப்பில் இருந்து வந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக 4,5,6 ஆம் இடங்களில் இறங்கும் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த இடங்களுக்கு தோனி, ரஹானே, ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் என ஒரு நீண்ட பட்டியலே இருந்து வருகிறது.
இதில் யாரை தேர்வு செய்வது என்பதே இந்தியா அணிக்கு பெரிய தலைவலியாய் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என யோசனை கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தோனி, ரிஷப் பண்ட் இருவரும் விளையாட வேண்டும். ரிஷப் பண்ட் அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் ஆடக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கூட இறக்கலாம். தற்போது தொடக்க வரிசை பணியை ஷிகர் தவான் சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் ரிஷப் பண்ட்டை ரோகித் சர்மாவுடன் இறக்கும் போது, இந்திய அணிக்கு நெருக்கடி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
அத்துடன் அது ஒரு வித்தியாசமான யுக்தியாக எதிரணிக்கு ஆச்சரியத்தை அளிக்கும். விரைவில் தொடங்க உள்ள இந்தியா–ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின் போது ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைத்து சோதித்து பார்க்கலாம். ஷிகர் தவானை அதற்கு அடுத்த வரிசையில் ஆட வைக்கலாம்" என கூறியுள்ளார்.