#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியின் கேப்டனாக அணியை வழி நடத்துவது எனக்கு கிடைத்த கவுரவம்.! மீசையை முறுக்கி ஷிகர் தவான் ஓப்பன் டாக்.!
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. தற்போது விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதால், இலங்கை தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்ளும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தொட்டுருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில், ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (வி.கீப்பர்), சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம், க்ருனால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சகரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிகர் தவான், இந்திய அணியின் கேப்டனாக அணியை நான் வழிநடத்த உள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய ஏ அணிக்காக நான் வங்கதேச தொடரில் கேப்டனாக விளையாடி உள்ளேன். அவர் இந்த தொடரில் பயிற்சி அளிக்க உள்ளது சிறப்பானது. ஒரு அணியாக நாங்கள் இணைந்து நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். தொடருக்காக சிறப்பாக தயாராகி வருகிறோம். என தெரிவித்துள்ளார்.