பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆரம்பத்திலே கேப்டன் ஸ்மித்தை வெறுப்பேற்றிய ராஜஸ்தான் வீரர்கள்! காரணம் என தெரியும்?
2019 ஐபிஎல் தொடரில் 45ஆவது ஆட்டம் இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இன்றைய போட்டியில் ஐதராபாத் அணியில் துவக்க ஆட்டக்காரர் பெயர்ஸ்ட்ரோ இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக விருத்திமான் சாஹா சாதா அணியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் வருண் ஆரோன் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார்.
முதல் ஓவரில் முதல் பந்திலேயே வார்னர் ஆப் சைடில் அடித்து ஒரு ரன் எடுத்தார். அந்த பந்தை பில்டிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர் ஸ்டம்பை நோக்கி வீச ஓவர் த்ரோவ் மூலம் முதல் பந்திலேயே 5 ரன்கள் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் ராஜஸ்தான் அணியில் வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் செய்த பீல்டிங் மிஸ்ஸால் நான்கு இரண்டு என அடுத்தடுத்து உதிர் ரன்கள் வாரி வழங்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பத்திலேயே சொதப்பிய ராஜஸ்தான் வீரர்களால் கேப்டன் ஸ்மித் மற்றும் ரசிகர்கள் மிகவும் வெறுப்படைந்தார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஹைதெராபாத் பட்ஸ்மான்கள் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகின்றனர்.