#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்! என்ன சாதனை தெரியுமா?
இந்திய அளவில் T20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்.
இந்தோரில் நேற்று நடைபெற்ற சையது முஸ்தாக் அலி கோப்பைக்காண தொடரில் மும்பை மற்றும் சிக்கிம் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய ஸ்ரேயர் ஐயர் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். இதில் 15 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடச்கும். இந்திய வீரர்களில் T20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். இதற்கு முன்னர் IPL தொடரில் டெல்லி அணிக்காக ஆடிய ரிசப் பண்ட் அடித்த 128 ரன்கள் தான் அதிகப்பட்ச ஸ்கோராக இருந்தது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 258 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சிக்கிம் அணி வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.