#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரே விக்கெட்டில் 12 வருட சாதனையை முறியடித்த ஸ்டார்க்! ஆஸ்திரேலியாவிற்கு ஆறுதல்
நேற்று நடைபெற்ற 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் பெயர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த உலக்கோப்பை தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் க்லென் மெக்ராத் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கைப்பற்றிய 26 விக்கெட்டுகளே முதல் இடத்தில் இருந்தது. தற்போது மெக்ராத் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மூன்றாம் இடத்தில் 2003 ஆம் ஆண்டு 23 விக்கெட்டுகளை வீழ்த்திய சமிந்தா வாஸ் உள்ளார்.
இந்த சாதனைகளை தற்போது முறியடிக்க இங்கிலாந்து வீரர்கள் ஆர்ச்சர்(19), மார்க் வுட்(17) மற்றும் நியூசிலாந்து வீரர்கள் பெர்குயூசன்(18), போல்ட்(17) ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது.