#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியில் இடம் கிடைக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது - இளம் வீரரின் உருக்கமான வார்த்தைகள்
அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இதற்கான வீரர்கள் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிசிசிஐ-ஆல் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று மேற்கிந்திய தீவுகளில் சமீபத்தில் சிறப்பாக ஆடிய சுபம் கில் இடம்பெறவில்லை. இது குறித்து பேசியுள்ள சுபம் கில், "இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன்.
ஆனால் மூன்று வகையான பட்டியலிலும் என் பெயர் வராதது மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் எனது விடாமுயற்சியை நான் விடுவதாக இல்லை. மேற்கொண்டு எனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் எதிர்காலத்தில் நிச்சயம் இடம் பிடிப்பேன்" என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய ஏ அணி நான்கு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது. இதில் சிறப்பாக ஆடிய சுபம் கில் 218 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி 54.50. ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடித்து இந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடிய சுபம் கில் 9 மற்றும் 7 ரன்களை எடுத்திருந்தார்.
16 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ள சுப கில்லின் சராசரி 77.78 மற்றும் இந்திய ஏ அணியில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள அவரின் சராசரி 47.36. நல்ல பார்மில் இருக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காதது சற்று ஏமாற்றம்தான்.