பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாபர் அசாமின் கனவை தவிடு பொடியாக்க தயாராகும் சூர்யகுமார்.. புதிய அட்டவணையால் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி..!
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலில் இதுவரை எந்த வீரரும் ஒரே சமயத்தில் முதலிடம் வகித்தது இல்லை. இதுவரை ரிக்கி பாண்டிங், ஹாசிம் அம்லா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஒரே சமயத்தில் இரண்டு விதமான போட்டிகளில் முதலிடம் இடம் வகித்துள்ளனர்.
அந்த வரிசையில் நீண்ட நாட்களாகவே ஐசிசி கிரிக்கெட் பேட்ஸ்மென்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். மேலும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் பாபர் அசாம் விரைவில் முதல் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மூன்றுவிதமான போட்டிகளிலும் ஒரே நேரத்தில் முதலிடத்தில் இருந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் பாபர் அசாம். ஆனால் தற்போது இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரம் சூர்யகுமார் யாதவினால் பாபர் அசாமிற்கு புதிய பிரச்சனை வந்துள்ளது.
இன்று ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருக்கும் பாபா அசாமிற்கும் சூர்யகுமாருக்கும் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்னும் இரண்டு டி20 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் சூர்யகுமாரால் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம் பாபர் அசாம் அடுத்தபடியாக ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தான் விளையாட போகிறார்.
இதனால் ஒரே நேரத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பினை பாபர் அசாம் இழந்து விடுவாரோ என்ற அச்சம் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் எழ துவங்கியிருக்கும்.