#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய தாரகை; குவியும் பாராட்டுகள்.!
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தொடர் காயங்களினால் அவதிப்பட்டு வந்த மீராபாய் கடந்த ஒன்பது மாதங்களாக எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
இதன்மூலம் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளும் பிரகாசமான வாய்ப்பு மீராபாய் சானுவுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.