#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அப்படியே பழைய தோனியை பார்த்த மாதிரியே இருக்கு!! என்னங்க இப்படி அடிக்கிறாரு.. சிஎஸ்கே வெளியிட்ட வைரல் வீடியோ..!
சென்னை அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது தோனி பந்துகளை பறக்கவிடும் வீடியோ காட்சி ஒன்றை சென்னை அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் முதல் பாதி ஏற்கனவே முடிந்துவிட்டநிலையில், அதன் இரண்டாவது பாதி நாளைமுதல் தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதம்முள்ள போட்டிகள் நாளைமுதல் தொடங்குகிறது. நாளை நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
கடந்த சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டிகளில் சென்னை அணி மோசமாக விளையாடி படுதோல்வியை சந்தித்தது. ஐபில் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி முதல் சுற்று ஆட்டத்திலையே வெளியேறியது. குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் தல தோனியின் ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
14 போட்டிகளில் விளையாடிய அவர் 200 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரிலும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தோனி மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டத்தின்போது, வீரர்கள் வீசும் பந்துகளை தோனி நாலாபுறமும் சிக்ஸர்களுக்கு பறக்கவிடும் வீடியோ ஒன்றை சென்னை அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதனை பார்த்த தோனி ரசிகர்கள், பழைய தோனியை பார்த்த மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.
All arealayum Thala...🥳#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/Zu85aNrRQj
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 18, 2021