பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? பரபரப்பான கடைசி லீக் போட்டிகள்!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. அந்த இரண்டு போட்டிகளுமே இன்று நடைபெறுகிறது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் நுழைந்துவிட்டன. தற்போதைய நிலவரப்படி மூன்றாவது இடத்தை இங்கிலாந்தும் நான்காவது இடத்தை நியூசிலாந்தும் தக்கவைத்துள்ளது. ஆனால் முதல் இரண்டு இடங்களை தீர்மானிப்பதற்கான முக்கியமான இரண்டு போட்டிகள் இன்று தான் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளில் எந்த அணி முதலிடத்தை பிடிக்கும் என்பதை தீர்மானிக்கும் போட்டிகள்தான் இன்று நடைபெறுகின்றன. முதல் லீக் போட்டியில் இந்திய அணி இலங்கையையும் இரண்டாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது.
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே வென்றால் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்று இந்தியா வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு முதல் இடம் கிடைக்கும்.
இந்திய அணி முதலிடம் பிடித்தால் அரையிறுதியில் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை எதிர்கொள்ளும். ஒருவேளை இரண்டாவது இடத்தையே பிடித்தால் மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் இந்தியா மோதும்.