பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
U19 உலகக்கோப்பை: அரையிறுதியில் பாக்கிஸ்தானை பந்தாடிய இளம் இந்திய வீரர்கள்!
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தானை வென்றது.
16 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இந்தியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதன் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். பாகிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 43.1 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 172 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் நாஷீர் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் சுஷாந்த் மிஸ்ரா 3, தியாகி, பிஷ்னாய் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஷ்வால் மற்றும் சக்ஷேனா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஷ்வால் 105, சக்ஷேனா 59 ரன்களை எடுத்தனர்.
நாளை மறுநாள் நடைபெறும் இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியுடன் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி மோதும்.