#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய விஜய் சங்கர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? இதோ!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து இறுதியில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. உலகக்கோப்பை போட்டியில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணி எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணியுடனான முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் இடம்பெற்று சிறப்பாக விளையாடிவந்த நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் இந்திய அணியில் மயங் அகர்வால் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நாடு திரும்பிய விஜய் சங்கர் தற்போது TNPL போட்டிகளில் விளையாட உள்ளார். நாளை தொடங்கும் TNPL சீசன் 4 போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியுடன் சென்னை அணியின் கேப்டனாக விஜய் சங்கர் விளையாட உள்ளார்.