#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இமாலய வெற்றியிலும் ஒரு சோகம்.. ஹைதராபாத் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு!
நேற்று நடைபெற்ற 47 ஆவது ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வலிமையான டெல்லி கேப்பிடஸ் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் 12 ஆவது ஓவரை சன்ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் வீசினார். அந்த ஓவரில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் விக்கெட்டை வீழ்த்தினார் விஜய் சங்கர்.
ஆனால் அதே ஓவரில் ஹைதராபாத் அணிக்கு ஒரு சோகம் ஏற்பட்டது. அந்த ஓவரின் 5 ஆவது பந்தினை வீசிய பிறகு விஜய் சங்கர் தசைப்பிடிப்பால் வலியால் துடித்தார்.
நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். கடைசி பந்தினை டேவிட் வார்னர் வீசினார். ஹைதராபாத் அணியில் ஏற்கனவே புவனேஷ்வர் குமார், மிச்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறிவிட்டனர்.
வில்லியம்சன் காயத்தில் இருந்து இப்போது தான் மீண்டுள்ளார். பேட்டிங்கில் அசத்திய சாஹாவும் காயம் காரணமாக கீப்பிங் செய்யவில்லை. இந்நிலையில் தொடரின் முக்கியமான தருணத்தில் நல்ல பார்மில் இருந்த விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது ஹைதராபாத் அணியினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.