பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விரைவில் குட் நியூஸ் சொல்ல போகும் விராட் கோலி.. உண்மையை உளறிய டிவிலியர்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. தற்போது 35 வயதாகும் விராட் கோலி டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விராட் கோலி 2 டெஸ்ட் போட்டிகளில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருப்பதாக இந்தியா கிரிக்கெட் அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து விராட் கோலி விலகியதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் விராட் கோலியின் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் தான் விளையாடவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியது.
அதற்கு விராட் கோலியின் சகோதரர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ், விராட் கோலி குறித்த குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். அதனால்தான் கோழி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாக கூறியுள்ளார்.