#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இக்கட்டான நிலையில் கேப்டன்சியை ரோஹித்திடம் கொடுத்துவிட்டு வெளியேறிய விராட்கோலி.. என்ன காரணம் தெரியுமா?
நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் கேப்டனிசியை ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைத்தற்கான காரணத்தை கூறியுள்ளார் விராட் கோலி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று மோதிய 4 வது T20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்து. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கை தொடங்கினர்.
12 ரன்களில் ரோஹித் ஷர்மாவும், 14 ரன்களில் KL ராகுலும் ஆட்டம் இழக்க, கேப்டன் விராட்கோலி 1 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் மிகவும் அதிரடியாக விளையாடி சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதன்பின்னார் ரிஷப் பந்த் (30), ஷ்ரேயாஸ் ஐயர் (37) உள்ளிட்ட வீரர்கள் அதிரடியாக விளையாட, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை இந்திய அணி எடுத்தது.
186 என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தனது கேப்டன்சியை ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.
இதுகுறித்து போட்டி முடிந்தபின் விளக்கமளித்த கோலி, "நான் பந்தை எடுக்க ஓடிய போது, டைவ் அடித்து பிடித்து, பந்தை வீசினேன். அப்போது நான் சரியான நிலையில் இல்லை. இதனால் தனது உடலின் வெப்பநிலை மாறுவதுபோல் உணர்ந்தேன். ஆதலால் காயத்தை பெரிதாக்க விரும்பவில்லை. அதற்காகவே கேப்டன்சியை ரோஹித் ஷர்மாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
விராட்கோலி மைதானத்தில் வெளியேறும்போது இங்கிலாந்து வெற்றிபெற அணி 24 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் மிகவும் வலுவான நிலையில் இருந்தார். அப்போது கேப்டன்சியை ஏற்ற ரோஹித்ஷர்மா ஷர்துல் தாகூரை பந்து வீச அழைத்தார்.
ஷர்துல் தாகூரும் அபாரமாக பந்து வீசி முதல் பந்திலையே பென் ஸ்டோக்ஸை அவுட் ஆக்கினார். அதேபோல் அடுத்த பந்தில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனும் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இரண்டு வலுவான வீரர்களை வெளியேற்றியன் மூலம் இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.
இக்கட்டான நிலையில் கேப்டனிசியை ஏற்றதோடு, அணியை வெற்றியும்பெறச்செய்த ரோஹித் ஷர்மாவை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.