#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விராட்கோலியின் மின்னல்வேக செயலால் ஸ்டன்னாகிப் போன ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டிகளை அடுத்து ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 347 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகளை இழந்து 48.1 ஓவர்களில் வெற்றி இலக்கான 348 ரன்களை அடித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக 109 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி வீரர் டைலர் அணியின் வெற்றிக்கு உதவி செய்தார்.
இதனிடையே இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணியின் வெற்றிக்கு உதவி செய்தார் நிகோலஸ். நிகோலஸ் விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணி வீரர்கள் கடும் முயற்சி செய்தனர்.
இந்த நேரம் பார்த்து டைலர் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு நிக்கோலஸை கூப்பிட அருகில் இருந்த கேப்டன் விராட் கோலி மின்னல் வேகத்தில் பாய்ந்து அவரை ரன் அவுட் செய்தார். நியூசிலாந்து அணி வீரர்களின் எளிமையான சில கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டதால் கடும் கோவத்தில் இருந்த விராட்கோலி நிக்கோலஸை மின்னல் வேகத்தில் அவுட் செய்து தனது பழியை தீர்த்துக்கொண்டார்.
விராட்கோலியின் இந்த மின்னல்வேக ரன் அவுட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#NZvIND pic.twitter.com/EuztNL9n1g
— ROHIT KUMAWAT (@ROHITKU78395042) February 5, 2020