கிரிக்கெட் மட்டுமின்றி விராட் கோலி எந்தத் தொழில் எல்லாம் செய்கிறார் தெரியுமா? ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?



virat kohli

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உருவாகி வருகிறார். சச்சினின் பல சாதனைகளை கோலி நிச்சயம் முறியடிப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. 

சமீபத்தில் கூட உலகக்கோப்பை தொடரின் போது 20000 சர்வதேச ரன்களை மிக விரைவாக கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். மேலும் சச்சினின் 452 இன்னிங்சில் அடித்த 49 ஒருநாள் சதத்தினை விரைவில் கோலி முறியடிக்கபோகிறார். காரணம் கோலி வெறும் 228 இன்னிங்சிலேயே 41 சதங்கள் விளாசியுள்ளார். 

Virat Kohli

இந்நிலையில் தொடர்ந்து வருமானம் வருவதற்காக Chisel என்ற ஜிம்மில் முதலீடு செய்துள்ளாராம்.மேலும் இந்த ஜிம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி லண்டனை சேர்ந்த "ஸ்போர்ட் காணவோ" என்ற அமைப்பிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளாராம்.மேலும் இவருக்கு wrogan என்ற ஆன்லைன் ஷாப்பிங் தளமும் உள்ளது. கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி பல தொழில்களிலும் சிறந்தவராகவும் உள்ளார்.இதெல்லாம் போக விராட் கோலி விளம்பரப் படங்களில் ஒரு நாள் நடிப்பதற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாம்.