பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விராட்கோலி, டி-வில்லியர்ஸ் இருவரையும் ஐ.பி.எல் தொடரிலிருந்து தடைசெய்ய வேண்டும் - கே.எல்.ராகுல் கொடுத்த அதிர்ச்சி.
ஐபில் போட்டிகளில் இருந்து பெங்களூரு அணி வீரர்கள் விராட்கோலி மற்றும் டி-வில்லையர்ஸ் இருவரையும் தடை செய்ய வேண்டும் என பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று நடைபெறும் போட்டியில் மோதுகின்றன. இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்ற ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்க உள்ளது.
அதேபோல் இந்த சீசனில் மிகவும் பலம்வாய்ந்த அணியாக இருக்கும் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்லவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது. எனவே நிச்சயம் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பெங்களூரு அணி வீரர்கள் விராட்கோலி மற்றும் டி-வில்லையர்ஸ் இருவரையும் ஐபில் போட்டியில் இருந்து தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இருவரும் 5 ஆயிரம் ரன்களை கடந்தபிறகு இவர்கள் இருவரும் வெளியேற வேண்டும். அடுத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என வேடிக்கையாக கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.