#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
26 வருட சாதனையை முறியடித்த விராட் கோலி! குவியும் பாராட்டு
இன்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஓன்றை படைத்துள்ளார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக பாக்கிஸ்தான் அணியின் ஜாவேத் மியாண்டட் எடுத்திருந்த 1930 ரன்களே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. இவர் இந்த ரன்னை 64 இன்னிங்சில் எடுத்தார். இவர் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக கடைசியாக 1993 ஆம் ஆண்டு ஆடினார்.
இந்நிலையில் இந்த சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று முறியடித்துள்ளார். இன்றிய ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாக 19 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த கோலி இன்று 19 ரன்கள் எடுத்த போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார்.
கோலி இந்த சாதனையை தனது 34 ஆவது இன்னிங்சில் நிகழ்த்தியுள்ளார். 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாதனையை கோலி முறியடித்துள்ளார். மூன்றாவது இடத்தில ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் உள்ளார்.