பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குழந்தை பிறந்த பிறகு இதைத்தான் செய்வேன்.! விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா ஓப்பன் டாக்.!
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா பேசுகையில், ஷூட்டின் போது ரொம்பவே அனுபவித்து நடிக்கிறேன். அடுத்த சில நாட்களுக்கு இந்த பணி தொடரும். இந்த ஆண்டு சினிமா துறைக்கு மோசமான ஆண்டாக அமைந்திருந்தாலும் இப்போதாவது களத்திற்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த இக்கட்டான சூழ்நிலையில் படப்பிடிப்பில் ஈடுபடுவதால் படப்பிடிப்பில் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நடித்துவருகிறோம். எனக்கு குழந்தை பிறந்த உடன் சினிமா படப்பிடிப்பிற்கு திரும்புவேன். குழந்தை, குடும்பம் மற்றும் சினிமாவில் ஈடுபடுவதற்கான யோசனைகளை வைத்துள்ளேன்.
எனக்கு நடிப்பதில் எனக்கு திருப்தி கிடைப்பதால் வாழ்நாள் முழுக்க அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். முழுமையாக தயார் நிலைக்கு திரும்பிய பிறகு அடுத்த ஆண்டு மே மாதம் முதல் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா.