தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
போட்டிக்கு பிறகு ஹேப்பி நியூஸ் சொன்ன விராட்கோலி.. இனிதான் சரவெடி காத்திருக்கு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் நான்கு T20 போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தநிலையில், நேற்றைய கடைசி போட்டியில் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் நேற்றைய போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம்போல் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து ரோஹித் ஷர்மா - விராட்கோலி இருவரும் ஓப்பனிங் இறங்கினர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இருவரும் மிகவும் அபாரமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர்.
34 பந்துகளில் ரோஹித் சர்மா 64 ரன்களும், கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய விராட்கோலி 52 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 என்ற வலுவான இலக்கை எட்டியது. இந்நிலையில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்தது. இதன்மூலம் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது குறித்து பேசிய அணியின் கேப்டன் விராட்கோலி, "நான் இனிவரும் ஐபிஎல் தொடரிலும் தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்க உள்ளேன். கடந்த சில காலம் நான் வெவ்வேறு ஆர்டரில் விளையாடினேன். தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் சரியாக அமைந்துள்ளது என எனக்கு தோன்றுகிறது.
இதனால் ரோஹித் ஷர்மாவுடன் டாப் ஆர்டரில் டி20 உலகக்கோப்பை வரை விளையாட உள்ளேன். எங்களது ஓப்பனிங் பாட்னர்ஷிப் சரியாக அமைந்துவிட்டது" என விராட் கோலி தெரிவித்தார்.
அதேபோல் ரோஹித் ஷர்மா - விராட்கோலி இருவரும் ஓப்பனிங் விளையாடுவது அப்படியே சச்சின் - சேவாக் இருவரும் விளையாடுவது போல் இருப்பதாக முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.