#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல இதுதான் காரணம் - பாக்கிஸ்தான் முன்னாள் வீரர் பகீர் கருத்து!
கடந்த 2018/19 ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற காரணம் அந்த அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாததே என பாக்கிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 2018/19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வென்ற முதல் டெஸ்ட் தொடர் இதுதான்.
அப்போது ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் இடம்பெறவில்லை. காரணம் இருவரும் பந்தினை சேதப்படுத்திய புகாரால் ஒரு வருடம் தடைக்காலத்தில் இருந்தனர். டிம் பெய்ன் கேப்டனாக செயல்பட்டார்.
இந்நிலையில் இந்தியாவின் இந்த சரித்திர வெற்றி குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பாக்கிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ், "இந்திய அணியினர் சிறப்பாக விளையாடவில்லை என நான் கூறவில்லை; அவர்களும் சிறப்பாக விளையாடினர்.
ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக தொடரை வென்றதற்கு காரணம் அப்போது ஆஸ்திரேலியா அணியில் நிலவியிருந்த பல குழப்பங்கள் தான். மேலும் நட்சத்திர பேட்ஸ்மேன்களான வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது" என கூறியுள்ளார்.