#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு ரன்னில் முதலிடத்தை தவறவிட்ட வார்னர்! கில்லியாக கெத்துகாட்டும் ரோகித் சர்மா
நேற்று நடைபெற்ற 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஓராண்டு தடைக்கு பிறகு உலக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார் டேவிட் வார்னர். இந்த தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய வார்னர் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சதமடித்து பழைய பார்மிற்கு திரும்பினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய வார்னர் இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் சாதிக்க தவறிவிட்டார். நேற்றைய போட்டியில் டேவிட் வார்னர் வெறும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் வார்னர் இந்த உலக்கோப்பையில் 647 ரன்கள் எடுத்தார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 648 ரன்களுடன் ரோகித் சர்மா முதல் இடத்திலும் 606 ரன்களுடன் சாகிப் அல் ஹசன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த மூவருமே தற்போது தொடரை விட்டு வெளியேறியதால் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்(549), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்(548) ஆகியோர் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களிலே 673 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவும் இவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.