#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முன்னாள் சிஸ்கே வீரரை தட்டி தூக்கிய டெல்லி அணி..! உச்சக்கட்ட குஷியில் ரசிகர்கள்.!
2022 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால், அணிகளை ஏ,பி என இரண்டு குழுக்களாகப் பிரித்து லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏ குழுவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், பி குழுவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்ரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்(40) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் அணிக்காக 78 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும், இரண்டு வருடங்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடினார். பின்னர் 2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வானார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வாட்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியில் ஏற்கனவே ஆஸ்ரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து வரும் நிலையில் மற்றொரு ஆஸ்ரேலிய வீரரான ஷேன் வாட்சனும் துணை பயிற்சியாளராக நியமிக்கபட்டுள்ளது டெல்லி அணிக்கு மேலும் வலு சேர்ந்துள்ளது.