3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
நேற்றைய இந்திய அணியின் சொதப்பல்! ஊதி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்! பழிதீர்க்க காத்திருக்கும் விராட்!
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டிநேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே திணற ஆரம்பித்தனர்.
இந்திய அணியின் துவக்க வீரர்களான லோகேஷ் ராகுல் 11 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே ஆரம்பத்தில் திணறினாலும், பின்னர் சிறப்பாக ஆடி 30 பந்துகளில் 54 அடித்து அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 19 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்கள் எடுத்தும் அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 170 ரன்களை குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹேடன் வால்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இதனைத்தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் சிம்மன்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அபாரமாக பேட்டிங் செய்து 67 ரன்கள் குவித்தார். லீவிஸ் 40, ஹெட்மையர் 23, நிக்கோலஸ் பூரன் 38 ரன்கள் குவித்தனர்.
இந்தநிலையில் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 173 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அந்தப் போட்டிக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.