#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோனி இந்திய அணியில் விளையாடாதது ஏன்? ரகசியத்தை போட்டுடைத்த முன்னாள் பிசிசிஐ தலைவர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர் தல தோனி. இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் கொடுத்த தோனி தொடர்ந்து அணியில் விளையாடினார். அனால் 2019 உலககோப்பைக்கு பிறகு இரண்டு மாதம் ஓய்வில் சென்ற தோனி அதன் பிறகும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மனதில் பல்வேறு யூகங்கள் உருவாக ஆரம்பித்தன.
தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 2020 ஐபில் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட துவங்கினார் தோனி. இதனால் ஐபில் தொடருக்கு பின் தோனி இந்திய அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எழுந்தது.
ஆனால் கொரோனா பாதிப்பால் ஐபில் தொடர் நடைபெறுவது கேள்விக்குறியாகிவிட்டது. இந்நிலையில் தோனி இத்தனை நாட்கள் இந்திய அணியில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். அதில் தோனி தாமாகவே சில காலம் விளையாட வேண்டாம் என்ற முடிவில் இருந்ததாகவும் முதலில் இரண்டு மாதங்கள் ஓய்வு வேண்டும் என்றே அவரே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சமயத்தில் ரிஷப் பண்ட்டை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்தோம். அதே சமயம் அவருக்கு அடுத்து வந்த கேஎல் ராகுல் சிறப்பான கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்து வந்ததால் அணியில் ஒரு குறைபாடும் தெரியவில்லை. இதனால் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது ஒரு சவாலான விஷயமாக தான் உள்ளது. ஒரு வேளை அவர் ஐபில் தொடரில் ஆடியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் இப்போது அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.