சென்னை அணியின் முக்கிய வீரரை தேர்வு செய்யாததுக்கு இதுதான் காரணமா?



Why raidu was not selected for icc world cup 2019

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 31 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி, கொல்கத்தா, மும்பை அணிகள் புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் கைதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

World cup 2019

இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கான இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதில் தற்போது சென்னை அணிக்காக விளையாடிவரும் ராய்டு இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர். ஆனால் தேர்வு குழு அவரை தேர்வு செய்யாமல் தமிழக வீரர் விஜய் சங்கரை தேர்வு செய்துள்ளது.

ராய்டு தொடர்ந்து சீராக ஆடாததால் அவருக்கான இடத்தை உறுதி செய்ய தவறிவிட்டார். கிள் ரொடேட் செய்து ஆடுவதோடு அவ்வப்போது பெரிய ஷாட்டுகளையும் ஆடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒரு நாள் போட்டியில் கடைசி ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார்.

World cup 2019

இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராய்டு தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திற்கு விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார். விஜய் சங்கர் தற்போது கைதராபாத் அணிக்காக ஐபில் போட்டியில் விளையாடிவருகிறார்.

ராயுடு அணியில் எடுக்கப்படாதது குறித்து ஐசிசி டுவிட்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ராயுடுவின் சராசரி என்ன என்பது முக்கியமல்ல. தற்போதைய ஃபார்மும், அணிக்கு இப்போதைக்கு என்ன மாதிரியான வீரர் தேவை என்பதும்தான் முக்கியம். அந்த வகையில் விஜய் சங்கரின் தேர்வு சரிதான்.