சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
உலக கோப்பை அணியில் தோனி இடம்பெறுவது சந்தேகமா! கங்குலி விளக்கம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனதால் தோனியின் நிலை என்ன ஆகும்? அடுத்த உலக கோப்பை அணியில் தோனி இடம் பெறுவாரா? என்ற பல சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கடந்த ஒரு வருடமாக தோனி பேட்டிங்கில் தடுமாறி வருவதும் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடர் தொடங்கி T20, டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடி வருவதும்தான். இருப்பினும் தோனியின் அனுபவத்துக்கு முன் ரிஷப் பண்ட் நிற்க முடியாது என்றாலும், அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இன்னும் 17 ஒருநாள் போட்டிகளிலேயே பங்கேற்க உள்ளது. இந்த 17 போட்டிகளை வைத்து தான் சிறந்த அணியை இந்தியா அடையாளம் காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே இந்த போட்டிகளில் தோனி தனது திறமையை நிரூபித்து உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதனை பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி "அவர்கள் எந்த மாதிரியான அணியை உருவாக்க முயல்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. எனினும் தோனி உலககோப்பையில் நன்றாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக தான் ரிஷப் பண்ட் இடம்பிடித்துள்ளார். எனவே விக்கெட் கீப்பராக தோனி செயல்படுவதற்கு தான் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.