#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
14 வயதில் உலகசாம்பியன் ஆன தமிழக இளைஞன்! குவிந்துவரும் பாராட்டுகள்!
மும்பையில் சர்வதேச அளவில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற இளைஞர் பங்குபெற்று அசத்தியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக நடந்த இந்தப் போட்டியில், 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரக்ஞானந்தா 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
பிரக்ஞானந்தா ஜெர்மனியைச் சேர்ந்த வாலன்டின் பக்கெல்ஸை எதிர்கொண்டபோது 34-வது காய் நகர்த்ததியத்தில் ஆட்டத்தை டிரா செய்தார். இதனையடுத்து பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனைபடைத்த தமிழக இளைஞனுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.