உலகக் கோப்பைக்கு விஜய் சங்கரா ஹர்த்திக் பாண்டியாவா இந்திய மு.வீரர் பளீர் பேச்சு.!
உலகக் கோப்பை போட்டித் தொடருக்கு இந்திய அணிக்கு தேவை விஜய் சங்கரா, ஹர்திக் பாண்டியாவா என்பது குறித்து ஆசிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அந்த அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நேற்று முன்தினம் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறும்போது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது 5வது இடத்தில் களமிறங்கிய விஜய் சங்கர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். 46 ரன்கள் எடுத்த நிலையில், கோலி ஸ்டிரைட் டிரை செய்த போது அந்த பந்து பவுலர் ஜம்பாவின் கையில் பட்டு ஸ்டெம்பில் பட்டது. இதனால் விஜய் சங்கர் ரன் அவுட் முறையில் பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதே சமயம் பவுலிங்கில் முதல் ஓவரில் 13 ரன்கள் வாரிக் கொடுத்தாலும், கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு விஜய் சங்கருக்கு கிடைத்தது. இதில் அற்புதமாக செயல்பட்ட விஜய் சங்கர் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மட்டுமல்லாமல், விஜய் சங்கர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். விஜய் சங்கரின் பவுலிங் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லாவிட்டாலும் 6,7வது பவுலராக கணக்கில் கொள்ளலாம். பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.
15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய இரு ஆல் ரவுண்டர்கள் இடம்பெறுவது பலம் சேர்க்கும் என ஆஷிஸ் நெஹரா தெரிவித்துள்ளார்.