கேஎல் ராகுல் சதம் கோட்டைவிட்டாரா.. விஜய் சங்கர்; விஷயம் தெரியுமா?



world cup 2019 - india vs bangladesh - warmup match

உலகக்கோப்பை தொடர் நெருங்கும் வேளையில் அணைத்து அணிகளும் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்திடம் தோல்வியை தழுவியது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தவான்(1) மற்றும் ரோஹித் சர்மா(19) இருவரும் தடுமாறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விஜய் ஷங்கர் 2 ரன்னில் ஆட்டமிழக்க கே எல் ராகுலுடன் தோனி ஜோடி சேர்ந்தார்.

World cup 2019

பின்னர் கே எல் ராகுல் மற்றும் தோனி இருவரும் நிதானமாக ஆடி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திசை திருப்பினர். அதேசமயம் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கவும் செய்தனர். நான்காவது இடத்தில் இறங்கி சிறப்பாக ஆடிய ராகுல் சதமடித்து 108 எடுத்து ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தல தோனி சதம் அடித்து 113 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல், செஞ்சுரி அடித்து அசத்தினார். ஆனால் இந்த இடத்துக்கு பிரதான வீரராக கருதப்பட்ட விஜய் சங்கர் வெறும் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். 

World cup 2019

வெறும் ஒரு போட்டியை வைத்து அந்த இடத்துக்கு ராகுல் தான் சரியான தேர்வு என்ற முடிவுக்கு வரமுடியாது. தற்போதைக்கு ராகுலின் ‘பார்ம்’ கேப்டன் கோலிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் ஆறுதலான விஷயம் தான். ஆனால் தமிழக வீரர் விஜய் சங்கர் இந்த சூப்பர் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.